இன்னொரு பிறவி (Born Again)

கடலோடு போராடும் நம் மக்களின் அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கடலுக்கு செல்பவர் திரும்பி வருவார் என்ற உத்தரவாதம் இங்கு இல்லை. ஒருபுறம் இயற்கையின் சீற்றம்... மறுபுறம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்... இன்னொருபுறம் வெளிநாட்டு கப்பல்களால் நேரும் விபத்து. எந்தநேரமும் எதுவும் நடக்கலாம். கடலில் இவ்வாறு காணமல் போய் திரும்பி வருவார் என காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம். மனைவி மக்கள் ஏக்கங்கள் வீணாய் போவதுதான் சோகத்தின் உச்சம். ஏதோ ஒருசிலர் அதிசயப் பிறவிகளாக திரும்பக் கிடைத்து விடுகிறார்கள்.அப்படி ஒரு நிகழ்வு நமது ஊரிலும் நடந்திருப்பது கடவுளின் கருணையின் அடையாளம். நமது மண்ணைச் சார்ந்த ஜேசுதாசன் (38), ஆல்பர்ட் (38), பிராங்கிளின் (40) ஆகிய முவரும் கோடிமுனையைச் சார்ந்த இன்னும் சிலரோடு அடையாளம் தெரியாத மனிதர்களால் கடலில் சிறைபிடிக்கப்பட்டனர். பலரது அயராத முயற்சியின் பலனாக வீடு திரும்பினர். 20.05.2007 தமிழக முதல்வர் திரு.கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment