ஆக்னஸ் - புதிய மலர் சாத்தியம் (child after recanalisation)

நமது மண்ணைச் சார்ந்த ஆக்னஸ் சுனாமியில் தனது நான்கு குழந்தைகளையும் பறிகொடுத்தார். இதனை நினைத்து நினைத்து நெஞ்சம் கனத்துப் போன அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆம்.. மறுசுழற்சி மூலம் பிரதீக்சா என்ற அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையின் பெயரின் அர்த்தமே 'நம்பிக்கை தரும் குழந்தை' என்பதாகும். குழந்தை பிறக்கும்போது 3.35 கிலோ எடையைக் கொண்டிருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் சுனாமியால் தங்களது குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு மறுசுழற்சி சிகிச்சையை மேற்கொண்ட பெண்களில் முதன்முதலாக குழந்தையை பெற்றெடுக்கும் பேற்றினை கடவுள் நமது ஊரைச் சார்ந்த ஆக்னசுக்கு கொடுத்திருக்கிறார். இதைப் பற்றி உலகெங்கும் செய்திகள் பரவின. மக்களெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
No comments:
Post a Comment